உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை […]
ஷாஜஹானின் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானின் 367-வது உர்ஸ் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொது மக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் குமார்படேல் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரைதளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை […]
கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 […]
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் […]