தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வருசநாடு அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுவதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்குள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.