நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில், சுய உதவிக்குழு, விவசாய பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.