திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.முன்னதாக […]
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.அறுபடை வீடுகளில் முருகனின் 4ஆம் படை வீடான சுவாமிமலையில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா தொடக்க நிகழ்வில் விநாயகர், சண்டிகேஸ்வரர் சகிதம் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கஜ வாகனம் பொறிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் […]
பாகிஸ்தானுக்கு குல்பூஷணை பார்க்க சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும் வளையல், ஆகியவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தினர். ‘மகாபாரதத்தில் திரௌபதியின் துகிலுரிந்த நடவடிக்கை, போருக்கு வழிவகுத்தது. அதேபோன்று குல்பூஷ்ண் மனைவிக்கு நடந்த அவமதிப்புக்கு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்’ என்று சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்… sources; dinasuvadu.com