மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா ஜன., 27ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. கோடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கியத்துவமாக கருதப்படும் தெப்பத்திருவிழா சனிக்கிழமை […]