பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் இருந்து பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிடில், நாங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப கொடுத்துவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடியானது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுங்க சாவடிகளில் வேலைபார்த்த சுமார் 25க்கும் மேற்பட்டோரை […]
OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமல். சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்திருத்தார். இதனையடுத்து, இன்று முதல் OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சுங்க சாவடியை நிரந்தரமாக நீக்குமாறும் […]
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள் ஆத்திரத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகளால் பரபரப்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் […]