Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண […]
Tollgate: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி […]
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் இருந்து பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிடில், நாங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப கொடுத்துவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடியானது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுங்க சாவடிகளில் வேலைபார்த்த சுமார் 25க்கும் மேற்பட்டோரை […]
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடியில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துளளார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக […]
உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி […]
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி ராஜ்யசபாவில் பேசுகையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இறுதி முடிவுகள் இன்னும் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் “சிறந்த தொழில்நுட்பம்” விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பயனர்கள் வாகனம் […]
டேராடூனில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுங்கத்துறை அதிகாரியை காப்பாற்றிய பெண்-வைரலாகும் வீடியோ டேராடூனில் உள்ள லாச்சிவாலா சுங்கச்சாவடியில் சிமென்ட் ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சுங்கச்சாவடி மீது மோதியது. இந்த சம்பவத்தில் சாவடியின் உள்ளே சிக்கிக்கொண்ட சுங்கத்துறை அதிகாரியை பெண் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, […]
சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை […]
கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 முதல் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன.ஃபாஸ்டேக் அமலாக்கம் தேசிய நெடுஞ்சாலைகளில் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைத்து வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக்(FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது என்று பிடிஐ […]
32 சுங்கச்சாவடிகளை கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகள் கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]
சுங்கக்கட்டணத்தின் விலையை உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எரிபொருள்,எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிர்ச்சியை தரும் செய்தி: “தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் […]