தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முதலில் வட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்து தென் மாவட்டங்களை தாக்கியது. தற்போது டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. […]
கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை. சீர்காழி வட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். அண்மையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செமீ மழை கொட்டித்தீர்த்தது. கடுமையான பாதிப்புக்குள்ளான அப்பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மின்சார இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், […]
கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. அங்கு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தாலும், இன்னும் அங்கு மழை தொடர்வதாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வாகன சோதனையின் போலிசார் ஈடுபட்டபோது அந்த வழியே வந்த பிரபல ரவுடியான கலைவாணனை நிறுத்தி விசாரித்தனர். அவன் வைத்திருந்த 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை திருச்சியில் இருந்து வெடிகுண்டுகள் செயலிழப்பு சிறப்பு பிரிவு போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி, பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அழித்தனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய வெடிமருந்து, மற்றும் ஆணிகளை ஆய்வுக்காக போலீசார் […]