தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் அரசு அதன் தீவிரத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்கள் நிதிய்யுதவி அளிக்கலாம் என அரசின் தரப்பிலிருந்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலதரப்பினரும் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் இதை விமர்சனம் செய்யும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுவின் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் , மோடி தலைமையிலான […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மக்கள் மீது தமிழக காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் . 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்திக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நாளை தூத்துக்குடி வருகிறார்.