சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..!
சீசன் களை கட்டியதை தொடர்ந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பலத்த சாரல் மழை நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டுக்கான சீசன், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கியது. சீசன் தொடங்கிய முதல் வாரம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் […]