புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ரோடியர் மில் (AFT ) திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது சிவி சண்முகம் கூறியதாவது, 80க்கு பிறகு புதுச்சேரியை காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, பாஜக தான் ஆண்டு வருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் இவர்களால் புதுச்சேரியில் எந்த வளர்ச்சியாவது இருக்கிறதா? என்றும் புதுச்சேரியில் கூட்டணி […]
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு தேர்தல் குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவின் கூட்டணி ஒருபக்கம் வலுவாக இருந்தாலும், மறுபக்கம் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி […]
சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் […]
தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள். தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக தரப்பில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் உடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு காரணமாக அதிமுகவினர் […]
தமிழக காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது; அன்றே புகார் அளித்த நிலையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது; ஜெயலலிதா இருந்த அறை முழுவதுமாக சூறையாடப்பட்டது.திமுக தான் […]
பொதுக்குழு முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேரில் சந்தித்து சிவி சண்முகம் வழங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்ததோடு, மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த […]
அதிமுகவுக்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ்-க்கு பின்னால் இருந்து திமுக செயல் பட்டு வருகிறது சி.வி.சண்முகம் பேட்டி. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் […]
வேதா இல்லம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி உய்ரநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், […]
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை […]