அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!
விழுப்புரத்தில் அதிமுக முன்னால் அமைச்சர் சி.வி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் கைது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்கக்கோரியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலையின் கீழ் அதிமுக முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவை உயர் […]