இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், […]
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும்,மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையத்தில் மனு: குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இதனிடையே,டெல்லி சென்றுள்ள […]
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஆர்எஸ் பாரதி,டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார்,நவநீதகிருஷ்ணன்,எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. […]
விழுப்புரம்:காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது. விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக அரசுக்கு எதிராக அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து,சொத்துவரி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி அளிக்காத இடத்தில் போராட்டம் நடத்தியதற்காக […]
சென்னை:வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது […]
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழக செயலாளருமான சிவி சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதை அதிமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “முன்னாள் […]