திருமணத்தடை-குழந்தையின்மையை தவிடு பொடியாக்கி அருளும் அர்த்த-ஜாம வழிபாடு!!
சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]