கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் […]
12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஓர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , 12ஆம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு அரசு […]
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடமையை சரியாக செய்யாததாக கூறி இரண்டு அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஷிவ்புரியின் தலைமை முனிசிபல் அதிகாரி (CMO) ஷைலேஷ் அவஸ்தியையையும், பிச்சோரின் ஜூனியர் உணவு அதிகாரி நரேஷ் மஞ்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக கூறினார். அவர் கூறுகையில், ‘ நல்ல பணி செய்யும் அதிகாரிகளை […]
மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் எனும், ஊரில் மார்ச் மாதம், 5ஆம் தேதி, 1959 அன்று பிறந்தார். பின் இவர், சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர். பின், 1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்தார். இவர், இந்திய அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார்.பின் படிப்படியாக அரசியலில் உயர்ந்த இவர், […]