கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இரு மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலர் களத்தில் நின்று மீட்பு […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை கொடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும் , அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு! மழைநீர் வெளியேற்றம் குறித்தும் , மீட்பு பணிகள் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 250கிமீ தொலைவில் நிலை கொண்டு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலர் […]