புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு இன்று முதல் அமல். புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான விலையில் சமீபத்திய திருத்தம் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இன்று (ஜூன் 16) முதல் புதிய உள்நாட்டு எல்பிஜி இணைப்புகளுக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை ரூ.750 உயர்த்தியுள்ளன. இதனால், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு […]
பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தின. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக […]
சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், இடிபாடுகளில் தீயணைப்பு வீரர் பத்மநாதன், அவரது மனைவி தேவி கார்த்திக்ராம், மற்றொருவர் […]
சேலத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு. சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் […]
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2,133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால், அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குளாகி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த […]
சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. அதன்படி,தற்போது,சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வீட்டுப்பயன்பாட்டுக்கான […]
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். செப்.1-ஆம் தேதியான இன்று, சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் […]
மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இந்த சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 14 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி, காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை […]
சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், விநியோகஸ்தர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக இந்துஸ்தான் மற்றும் பாரத் […]