1000 சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கையின் […]