கர்நாடக அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.5 கோடி அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வியாழன் அன்று கேப்பால்லி ஆனந்த், எச்.எஸ்.நாகலிங்கசுவாமி, சந்திரசேகர், எச்.கே.நாகராஜா மற்றும் கே.பி.ஹர்ஷன் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்றும், மொத்தம் ரூ.5,02,75,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார். மாண்டியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (முடா) இழப்பீடாக […]