அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மநீம வலியுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் […]