பாலமேடு ஜல்லிகட்டு நிறைவு..! தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் பரிசை வென்ற பிரபாகரன்..!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் ஏழு சுற்றுகள் முடிவில் இருபத்தி ஏழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். இவர், 2020, […]