சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதலை அரங்கேற்றின. சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த கொடூர தாக்குதலில் […]
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், நுஸ்ரா முன்னணி என்னும் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜர்தானா கிராமத்தின்மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலை […]
சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சி குழுவினருக்கும், கடந்த 11 நாட்களாக நீடிக்கும் சண்டையில், இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை போராடி வருகிறது. இத்தகைய புரட்சி குழுவினருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது. சிரிய அரசுக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில், கடந்த 11 நாட்களில் மட்டும், பொதுமக்களில் சுமார் 1000 பேர் […]
ஒரு மாதம் போர் நிறுத்த தீர்மானம் போடப்பட்ட சில மணி நேரத்தில் சிரியாவில் , ஆளும் அரசே அதனை மீறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) பகுதியில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன் அரசுப் படைகள் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் நடைபெற்று வரும் சண்டை 8வது ஆண்டை நெருங்கும் […]