பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை […]
அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]