தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது. அண்ணாமலை பல்.கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யுஜிசி தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.இதனால்,அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் […]
கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் ஞானதேவன் […]