சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது ஆகும். இவை பசரீங்கள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். தமிழகத்தில் இவை அடைக்கலக்குருவி, வீட்டுக்குருவி, ஊர்க்குருவி, சிட்டுக்குருவி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சிட்டுக்குருவிகள் குறித்த சிறப்பு தொகுப்பு.. உடல் அமைப்பு சிட்டுக் குருவிகள் உருவத்தில் மிகவும் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். இதற்கு, சிறிய அலகு, சிறிய கால்களுடன்காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை […]