அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பகைமையை மறந்து வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கும் தயாராகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் […]