கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களான வயதானவர்களே. இந்நிலையில், அமெரிக்காவின், சிகாகோவில், 1 வயது கூட […]