சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் […]
சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் […]
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கண்காணித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவின் கீழ் மொத்தம் 52,448 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகபட்சமாக எப்படி நடந்தன என்பதை MoRTH தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுப் பகுப்பாய்வைப் பகிர்ந்துள்ளது. மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த […]
போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ள இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் […]
நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக,இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர்,பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன்,மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று […]
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்துள்ளார். கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1999 இல், பாட்டியாலா விசாரணை […]
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்து […]
தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை […]
சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது, பாதுகாப்பாகவும் விழிப்புடனும் ஓட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக காவல்துறை வாகனம் ஓட்டும் செல்போனை தவிர்க்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவிட்டு, ‘வாகனம் ஓட்டும் போது செல்போனை தவிர்க்கவும் சாலையில் நம்முடன் பயணிப்பவர்களின் கனவுகளை¸ நம்முடைய ஒரு நிமிட கவனக்குறைவு அழித்துவிடும். கைப்பேசியில் இருந்து உங்கள் கவனத்தை நீக்கி சாலையில் செலுத்துங்கள். […]
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் தடுப்புச் சுவரில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.ராகேஷ் வயது 22. மேலும்,விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும் என்றும்,அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில்,நேற்றைய தினம்,நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில்,உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு […]
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ […]
தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை. தமிழகத்தில் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களது குடும்பங்கள் சீரழிவதுடன், போதை தலைக்கேறிய பின் வாகனம் ஓட்டுவதால், பல சாலை விபத்துக்களும் நிகழ்கிறது. இதனால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பாட்டுக்கு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் […]
கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானாவில் அமைந்துள்ள அக்ரா-கேப் கோஸ்ட் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கொமோவா மேம்போங் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வின்னிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு […]