இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சாரா டெய்லர் ஆவார்.இவர் பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இவர் சமீபகாலமாக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.மேலும் அடுத்து வர இருக்கும் t20 தொடரிலும் இவர் அணியில் இல்லை. கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான t20 போட்டியில் அறிமுகமான இவர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளும் 126 ஒரு நாள் போட்டிகளும் 90 t20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். […]