நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே உன் உதவியை வேண்டுமானால் மனிதர்கள் மறக்கலாம் ஆனால் தெய்வம் மறப்பதில்லை என் அன்பு குழந்தையே –ஷீரடி சாய்
இனி நடக்கப் போவதை பார்த்து வியக்க போகிராய் தைரியமாக இரு ஜெயிக்க போகிறாய் என் அன்பு குழந்தையே –சாய்
அன்பே மிக உன்னதமானது அன்பு அலைகள் எங்கும் மேலேழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும் – சாய்
கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றார்கள். ‘கடவுள் எப்படி இருப்பார்’ ..? என்கிறார்கள்.கடவுளை காண வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிட்டி விடாது. அதற்கான் அறிய தகுதி உடையவர்களுக்கே அது கிட்டும்.கடவுளைக் காண விருப்புவோர்,அதற்கு முன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என் அன்பு குழந்தைகளே – சாய்
ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு நிலையில் ஆண்-பெண் அதே போல தான் வாழ்வில் ஒருவன் இன்னலில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் ஆறுதல் சொல்லகூட ஆள் இருக்காது.அதே ஒருவன் நன்றாக வாழும் போது யார் என்றே தெரியாத முகம் கூட வந்து பேசி விட்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.அப்படி ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவன் கையை […]