தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னையில்,இன்று (15.03.2022) பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் ரூ.1588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி,இன்று நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவுபெறும் எனவும், 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டொன்றிற்கு 80 இலட்சம் […]