தங்கள் அன்பினால் நான் நலமாக இருக்கிறேன். மக்கள் பணியாற்ற விரைவில் மீண்டு வருவேன் என அமைச்சர் சாமிநாதன் ட்வீட். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால், மேலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்ச சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]