அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் […]