கானௌரி எல்லையில் காயமடைந்த விவசாயிக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹரியானா காவல்துறைக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளும், மத்திய அரசுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதபடி […]
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 13-ம் தேதி முதல் தங்கள் டிராக்டர் மூலம் கானௌரி மற்றும் ஷம்புவில் முகாமிட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பஞ்சாப்- ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த விவசாய […]
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முடிவடைந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சோளம் மற்றும் பருத்தி ஆகிய ஐந்து பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு […]