இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ஓமைக்ரான் பரவல் அதிகமாக பரவி வந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்கப்படாது என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கும். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்படுவதைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. […]