இரண்டாம் சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.சரபோஜி மன்னர் அழகிய தோற்றமும், சிறந்த வீரமும், உள்ளத்தில் நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். இவர், கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கினார். இவர், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி, தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1805 ஆம் ஆண்டு தேவநாகரி எழுத்தில் ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். […]