இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சிங் சன்னி உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பெரும்பாலும் மணல் கடத்தல் குறித்த குற்றசாட்டுகள் தான் அதிகளவு பேசப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்களது மருமகனிடம் மணல் கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. தற்பொழுதும் பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் […]
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை முன்னதாக ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து,தற்போது தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளதாகவும்,பதவியை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.அக்கடிதத்தில்,காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை கருத்தில் கொண்டு அதன் நலனைக் காக்கும் வகையில் தனது பதவியை […]
மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுப்பதாக பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார். இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் […]
பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார். இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி […]