கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கோவை ஆட்சியர் பேட்டி. கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், கோவையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் நேற்று முன்தினம் முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் […]