சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடந்த ஆறாட்டு விழா ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடிய சம்பவம் அய்யப்ப பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அபசகுனமாகவும் கருதப்பட்டது. இதையொட்டி அருள்வாக்கை அறிய சபரிமலை கோவில் சன்னிதானத்தில் தேவ பிரசன்னம் பார்த்து, பரிகார பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஆனி மாத பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடந்தது. ஜோதிட […]