நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க […]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நிறைவடைந்து நேற்று 4 மாநில சட்டப்பேரவை முடிவுகள் நேற்று வெளியாகின . அதில், காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது . தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பெரும்பாண்மைக்குக் 60 தொகுதிகள் தேவை, காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது . இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை […]
குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்கு உள்ள பாஜகவினருக்கு இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ். பாஜகவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசியதாக பாஜகவினர் மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக 4 எம்எல்ஏக்களிடம் 400 கோடி வரையில் பேரம் பேசப்பட்டது என புகார்கள் எழுந்தது . இது தொடர்பாக தெலுங்கானா தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமராவ் பாஜகவினர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், […]