கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார். விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் […]
சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இதைதொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி சந்திரசேகர் ராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தனது பண்ணை வீட்டில் இருந்து கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் இரவு 11.30 மணியளவில் குளியலறையில் கால் தவறி விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்த யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்து […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் […]
சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் […]
நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும் அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய […]
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் […]
தெலுங்கானா:தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்,போய்குடாவில் பழைய பொருட்கள் உள்ள குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 தீயணைப்பு வண்டிகள்: குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல்நலப் பரிசோதனைக்காக வந்தார். அங்கு முதல்வர் சந்திரசேகர் ராவ்விற்கு மருத்துவர்கள் இதயம் தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொண்டனர் என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் என்பதால் கவலைப்பட தேவையில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.