கௌரி கௌரா பூஜையில், சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதல்வர். ஆண்டுதோறும் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்வும் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சவுக்கடி வாங்கினார். இந்த சவுக்கடி வாங்குவதால், நல்ல அதிஷ்டம் கிடைக்கும் என்றும், தீமைகள் விலகும் என்றும் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களை அம்மாநில அரசு இலவசமாக ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்றது. பொதுத்தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஒரு சூப்பரான அறிவிப்பை கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார். அதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களை சத்தீஸ்கர் மாநில அரசு செலவில் ஹெலிகாப்டரில் இலவச சவாரி அழைத்து […]
கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது. வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தநாள்,கோவர்தன் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், துர்க் நகரில்,சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கோவர்தன் பூஜையில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது. பின் தன்னை சவுக்கால் அடித்த நபரை கட்டியணைத்தார். முதல்வர் பூபேஷ் பாகல் சவுக்கடி வாங்கிய வீடியோவை […]
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் கைது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். உத்திரபிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் பிராமணர்களை இழிவாக பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் மீது, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டி டி நகர் காவல் நிலையத்தில் சர்வ பிராமின் சமாஜ் சார்பில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். […]