Sadhguru : ஆன்மீக குருவாக அறியப்படும் கோவை ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து நேற்று முதலே, நரம்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வினித் சூரி அவர்களும், சிகிச்சை முடிந்த பின்னர் சத்குருவும் வீடியோ மூலம் தெளிவுபடுத்தினர். கடந்த நான்கு வாரங்களாக சத்குரு ஜக்கிவாசுதேவ் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், கடந்த மார்ச் 8ஆம் தேதி […]
புகழ்பெற்ற மண்ணியல் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் உலகளவில் 7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகத்தை சத்குரு வெளியிட்டார். உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த சர்வதேச வட்ட மேசை மாநாட்டில் 31 நாடுகளை சேர்ந்த 155 மண்ணியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் பொது செயலாளர் (UNCCD) திரு.இப்ராஹிம் தியாவ், ஆஸ்திரிலேய நாட்டு வேளாண் […]
“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ர 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் […]
“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய […]
“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார். பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற […]
காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார். அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம், காசிரங்கா வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அண்மையில் திறந்து வைத்தார். அப்போது, இரவு, சத்குரு ஜக்கி வாசுதேவ் , முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் ஒரே காரில் இரவு பூங்காவிற்குள் […]
காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம். ரூ.3-க்கு டிம்பருக்குள் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய உள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் […]
சத்குரு ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல […]
மண் காப்போம்’ இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு திரும்பிய சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை […]
27 நாடுகள்,27,200 கி.மீ பயணம்,593 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு,ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார்.இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் […]
மண் காப்போம்’ இயக்கத்திற்கு மஹாராஷ்டிரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தியாவின் 5-வது மாநிலமாக மஹாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்று (ஜூன் 12) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும்,மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு மற்றும் மஹாராஷ்ட்ரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களின் […]
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு […]
சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் […]
பஞ்சாப் பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்: நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள்.பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என […]
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம்’ இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி. சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான ஏப்ரல் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘மண்ணோடு […]
சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இவ்வியக்கம் சார்பில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தை உடுப்பி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 12) […]
சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 13 நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நேற்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது. இதை வரவேற்று சத்குரு ட்விட்டரில் நேற்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நன்றி சத்குரு. விரிவான திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், நதிகளை மீட்போம் இயக்கத்தின் […]
கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]
ஈஷா யோக மையத்தில் தேசிய கொடியேற்றினார் சத்குரு கோவை ஈஷா யோகா மையத்தில் 73-ம் ஆண்டு குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. கொண்டாட்டத்தில் கொடியேற்றி பேசிய சத்குரு, “தமிழ்மக்கள் அனைவருக்கும் 73-வது குடியரசுதினநல்வாழ்த்துக்கள். நம் பாரததேசம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், […]
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் அனைவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் அனைவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘பொங்கல் பண்டிகை – நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடிக் களித்திடுங்கள்!’ என தெரிவித்துள்ளார்.