நான் வாக்களிக்கும் முறைப்படி காங்கிரஸ் தலைவரானேன். ஆனால், பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம். வரும் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளததால் பிரதான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அங்கு பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அதே போல காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. […]
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேரத்திலும் வரும் என மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதில், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்ததாக நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது , மதுரையில் வீட்டு வீடு […]
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்த தேர்தலானது 57 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி உ.பி 6-ஆம் கட்ட தேர்தலில் 53.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என தெரிவித்ததை தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, கொரோனா […]
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மேலும், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராக நீடிக்கபோவதாகவும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தான் அவர் தனது பதவியை […]