மக்களவையில் லஞ்சம் வாங்குவோருக்கும், கொடுப்போருக்கும் ஒரே அளவு தண்டனையை வழங்க வகைசெய்யும் ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறிய இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், லஞ்ச வழக்குகளுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் லஞ்சப் புகார்களில் சிக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.