கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் டிசம்பர் 27 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்தான வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் முகமது தல்கா , முகமது அசாருதீன் , முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்பாக இன்று காலையும் சென்னையில் 4 இடங்களில் இது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் சோதனை செய்து 106 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர்கள் தீவிர ரகசிய கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களது வீடுகளில் அவ்வப்போது சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. சென்னையில் மட்டும் இந்த கண்காணிப்பு வளையத்தில் 18 […]
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து போலீசார் விசாரணையில் […]
மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோவையில் நடந்தது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். இதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது” என்று தமிழக ஆளுநர் ரவி […]
பாஜக அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு தடை கேட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக அறிவித்தது. இந்த பந்திற்கு தடை கேட்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜகவின் பந்த்-ஐ சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், அதற்கு தடை கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த வழக்கை […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டனர். – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும், அதன் மீதான தமிழக அரசு முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், கார் சிலிண்டர் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 12 […]
அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. – கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் என்பது தமிழகத்திற்கு எதோ ஆபத்து வருவதை உணர்த்துவது போல இருக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர் நல்லகண்ணு. கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஜமேஷ் முபின் உதவியவர்கள் 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை உட்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்ததாக 5 நபர்கள் உபா எனும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வாயை கூட திறக்காமல் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் அமைச்சர்கள் மூலம் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் இது பற்றி ஏதும் கூற மறுக்கிறார். என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். […]
கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில் மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் […]
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். காரை காவல்துறையினர், தடவியல் நிபுணர் குழுக்கள் சோதனை செய்ததில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததும் , […]
சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டுள்ளார். இறப்பதற்கு முன்பு ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என டிஜிபி கூறுவாரா? […]
கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஏதேனும் […]
ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கோவையில் நடந்த கார் வெடிவிபத்து குறித்து, கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் கருது தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து […]
மூக விரோத செயலுக்கு திட்டமிட்டது போன்ற குற்றங்கள் ஜமேசா முபீன் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை 4.10 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் இந்து கோவில் அருகே கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் இருந்தது. காருக்குள் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறையினர் , தடவியல் நிபுணர்கள் […]
கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் […]