ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கோவை கார் வெடிப்பு நிகழ்வில் மத்திய உளவு துறை தரும் தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அவருக்கு ஒரு Copy போடப்பட்டதா? உள்துறை அமைச்சகம் மாநில […]
கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர். கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமத்துவத்தின் போது காவல் துறையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நிலையில், கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்கிறார். கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது தீவிரவாத தாக்குதல் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் […]
தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என சேகர் பாபு பேட்டி. அமைச்சர் சேகர்பாபு சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும், பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்களின் சிலர் என்னைத் தொடர்பு கொண்ட திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள […]
பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் என அண்ணாமலை பேச்சு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது” கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்.18ம் […]
பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவை கார்வெடி விபத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சமத்துவம் தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது. துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுக்கள். ஆனால் பாஜக இதை அரசியலாக்குகின்றது. பாஜக […]
செயல்தான் முக்கியம் – பேச்சல்ல – ஆத்திர அரசியல்வாதிகளே புரிந்துகொள்வீர் என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றபட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த […]
தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு என சீமான் அறிக்கை. கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு […]
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது […]
கோவை கார் வெடிவிபத்து சம்பவத்தை தொடர்ந்து சல்பர் , பொட்டாசியம் போன்ற 75 கிலோ வேதிப்பொருட்கள் மொத்தமாக முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்ப்பட்டன. கோவை காவல் ஆணையர் தகவல். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது […]