தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும், வளிமண்டல சுழற்சியானது தமிழக பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை […]
கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கோவை ஆட்சியர் பேட்டி. கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், கோவையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான இவர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்து பல முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த வகையில்,இன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி […]
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மழை அதிகமாக பெய்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]