அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. […]
கடந்த 24 மணிநேரத்தில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் தற்போது மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது . இதில் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. கொரோனா தாக்கம் தற்போது சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசத்தை அணிய கட்டாய படுத்தியுள்ளது. அதே போல, கேரள அரசு கோவிட் […]
சீனாவில் புதன் கிழமை 292 ஆக இருந்த கொரோனா என்னைகை, நேற்று வியாழக்கிழமை அன்று 432ஆக எகிறியுள்ளது சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே கடந்த 2 வருடமாக ஆட்டம் காண வைத்துவிட்டது. தற்போது தான் அந்த கொரோனாவை அனைவரும் மறந்து வரும் நிலையில், தற்போது சற்று கொஞ்சம் அந்த கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நமது நாட்டில் முக்கிய நகரங்களில் கட்டாய முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் எட்டிப்பார்க்கின்றன, தற்போது சீனாவில் […]