நோய்த்தொற்றின் வரலாறு இல்லாதவர்களை விட, கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களிடையே இதய நோய்களை உருவாக்கும் ஆபத்து “கணிசமான அளவில்” அதிகமாக உள்ளது என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் SARS-CoV-2 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 4,131,717 பங்கேற்பாளர்களின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்கள், பெருமூளை இரத்த நாள நோய், பக்கவாதம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உள்ளிட்ட அரித்மியா தொடர்பான கோளாறுகள், மாரடைப்பு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும்,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரையுள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் […]
நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும் சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு […]